மக்களுடன்முதல்வர் திட்டம் - விரைவாக நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு

மக்களுடன்முதல்வர் திட்டம் - விரைவாக நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு

ஆலோசனை கூட்டம் 

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில், மக்களுடன் முதல்வர் திட்டம்” முகாம் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது மேற்கொள்ளபட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எந்தவொரு திட்டமானலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, இம்முகாமானது திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-1 ல், வார்டு எண்-1, வார்டு எண்-9, வார்டு எண் -10 ஆகிய வார்டுகளுக்கு அங்கேரிபாளையம், ஜெகா கார்டன் பகுதியிலும், மாநகராட்சி மண்டலம்-4-ல், வார்டு எண்-36, வார்டு எண்-42, வார்டு எண் -43 ஆகிய வார்டுகளுக்கு தெற்கு ரோட்டரி மண்டபத்திலும், வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-5,6,7,8,9,10,21, ஆகிய வார்டுகளுக்கு மூலனூர் ரோடு வெள்ளகோவில், முத்துக்குமார் திருமண மண்டபத்திலும், உடுமலைப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்- 26, 27, 28, 29, 30,31, 32, 33 ஆகிய வார்டுகளுக்கு ருத்திரப்பா நகர் உடுமலைப்பேட்டை வட்டம், ஜி.டி.வி திருமண மண்டபத்திலும், அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் அவிநாசி வட்டம் மேற்கு ரத வீதி குலாலர் திருமண மண்டபத்திலும் மற்றும் கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் திருப்பூர் வடக்கு வட்டம், கணக்கம்பாளையம் கிருஷ்ணா மஹாலிலும் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் முகாம்கள் நடைபெற்றது.

இம்முகாம்கள் மூலம் 1,861 மனுக்கள் பெறப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-1 ல், வார்டு எண்-11, வார்டு எண்-12, வார்டு எண் -13 ஆகிய வார்டுகளுக்கு 15, வேலம்பாளையம் கரிய காளியம்மன் திருமண மண்டபத்திலும், திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-4 ல், வார்டு எண்-41, வார்டு எண்-53, வார்டு எண் -54, வார்டு எண்-57 ஆகிய வார்டுகளுக்கு வித்யாலயம் லட்சுமி திருமண மண்டபத்திலும், பல்லடம் நகராட்சி வார்டு எண்-01, வார்டு எண்-02, வார்டு எண் -03, வார்டு எண்-06 மற்றும் வார்டு எண்-07 ஆகிய வார்டுகளுக்கு மங்கலம் ரோடு காளியப்பா திருமண மண்டபத்திலும், தாராபுரம் வட்டம், சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சந்திராபுரம் நாச்சிமுத்து கவுண்டர் திருமண மண்டபத்திலும, ஊத்துக்குளி வட்டம் சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சி அனைத்து வார்டுகளுக்கும் சர்க்கார் பெரியபாளையம் ஜே.இ.இ திருமண மண்டபத்திலும் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் முகாம்கள் நடைபெற்றது. இம்முகாம்கள் மூலம் 1, 364 மனுக்கள் பெறப்பட்டது. முன்னதாக திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் நகராட்சி, ஜே.கே.கே.மஹாலிலில் "மக்களுடன் முதல்வர்" முன்னோடி திட்டமாக நடைபெற்ற சிறப்பு முகாமில் வெள்ளகோவில் நகராட்சி, வார்டு எண் 1,2,3,4,11,12 மற்றும் 13-யில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து 494 கோரிக்கை மனுக்கள் பெற்றப்பட்டது. இதுவரை இம்முகாம்கள் மூலம் 3,719 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு முதற்கட்டமாக அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி) வார்டு வாரியாக கீழ்கண்ட துறைகள் மூலமாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற வருகிற 5 ம் தேதி வரை 71 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது.

இம்முகாம்கள் மூலம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராச்சித் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, தொழிலாளர் நலன் மற்றம் திறன் மேம்பாட்டுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை, கூட்டுறவுத்துறை, காவல் துறை, மாவட்ட தொழில் மையம் ஆகிய துறைகளில் சார்பில் இம்முகாமின் மூலம் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்படும்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் ”மக்களுடன் முதல்வர் திட்டம்” முகாம் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் தொடர்புடைய துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்து, மனுக்கள் மீது விரைவாக கள ஆய்வு மேற்கொண்டு உரிய காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், திருப்பூர் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், தனிதுணை ஆட்சியர் (சமூகப்பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி, நகராட்சி ஆணையாளர்கள், வட்டாட்சியர், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story