சிஎம்டிஏ உத்தரவு சட்டத்துக்கு விரோதமானது - உயர் நீதிமன்றம்

சிஎம்டிஏ  உத்தரவு சட்டத்துக்கு விரோதமானது - உயர் நீதிமன்றம்

செங்குன்றம் ஏரி

செங்குன்றம் ஏரி நீர்பிடிப்பு பகுதி என அறிவித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பிறப்பித்த உத்தரவை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்துள்ளது.

செங்குன்றம் ஏரி நீர்பிடிப்பு பகுதி எனக் கூறி, அலமாதி கிராமத்தில் இயங்கி வந்த தனியார் நிறுவனங்களை மூடி சீல் வைத்தும், கட்டுமானங்களை இடிக்க உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கில், செங்குன்றம் ஏரி நீர்பிடிப்பு பகுதி என அறிவித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பிறப்பித்த உத்தரவை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீர் பிடிப்பு பகுதி என அறிவித்து சில நிறுவனங்களுக்கு அதிகமான இழப்பீடு வழங்கியும், சில நிறுவனங்களை இடிக்க உத்தரவிட்டு பாரபட்சமாக செயல்பட்டதால் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. சென்னை பெருநகர இரண்டாவது முழுமைத் திட்டத்தை, இந்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு நகரமைப்பு சட்ட விதிகளை பின்பற்றி மாற்றியமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags

Next Story