தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குமரி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வின்சென்ட் ராஜ், பொருளாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர்கள் செல்வின் ஜோஸ், முருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டம் குறித்து மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் கூறுகையில், - தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்ட போராட்டம் நடந்துள்ளது. தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் வரும் 25ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story