கூட்டுறவு சங்க உதவியாளர் எழுத்துத் தேர்வு : ஆட்சியர் ஆய்வு

கூட்டுறவு சங்கங்களின் உதவியாளர் காலி பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்ட கூட்டுறவுத் துறை மூலம் விருதுநகர் மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 45 உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த பணியிடங்களுக்காக விண்ணப்பித்திருந்த 1044 நபர்களில் 934 நபர்கள் தேர்வு எழுதினர். 110 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத வரவில்லை. கூட்டுறவு சங்கங்களின் உதவியாளர் காலி பணி இடத்திற்கான எழுத்து தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.செந்தில்குமார், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயலாட்சியர் திருமதி ப்பி.ராஜலட்சுமி,கூட்டுறவு சங்க அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ,

Tags

Read MoreRead Less
Next Story