போட்டித் தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்பு 

போட்டித்  தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்பு 
ஆட்சியர் தீபக் ஜேக்கப்
தஞ்சாவூரில் நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் வகையில், போட்டித் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்பு நடக்கிறது.

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி –I , II & II A, IV தேர்வு மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் TET போன்ற தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால், காவல்துறையில் உதவி ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) தேர்விற்கான எழுத்து தேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வும் முடிவுற்று, தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நேர்முகத்தேர்விற்கான தகுதியுள்ளோர் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது.

இந்நேர்முகத்தேர்விற்கு தயாராகும் போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் , மாதிரி நேர்முகத்தேர்வு, டிச.20 (புதன் கிழமை) அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது . இதற்கென எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. இந்நேர்முகத்தேர்வானது காவல்துறை மற்றும் இதர துறை சார்ந்த வல்லுநர்களைக்கொண்டு நடத்தப்பட உள்ளது. பங்கேற்க விருப்பமுள்ள தேர்வர்கள் தேர்வு நுழைவுச்சீட்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்றை எடுத்து வரவேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மேற்கண்ட தேர்விற்குத் தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் பதிவெண்ணை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் அனுப்பியோ அல்லது 04362-237037 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது அலுவலகத்திற்கு நேரில் வந்தோ தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே, இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி நடைபெறவுள்ள மாதிரி நேர்முகத்தேர்வில் பங்கேற்று பயனடையுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story