கடற்கரை காவல்நிலைய செயல்பாடுகள் செயல் விளக்கம் 

சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலையத்தில், பள்ளி மாணவர்களுக்கு கடற்கரை காவல் நிலையங்களின் செயல்பாடுகள், கடற்சூழல் பாதுகாப்பு, வேட்டை தடுப்பு உள்ளிட்டவற்றை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள, சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலையத்தில், பள்ளி மாணவர்களுக்கு கடற்கரை காவல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமை வகித்து பேசுகையில், இந்திய கடல் எல்லைகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது, போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பது மற்றும் கடற்கரை சூழலியலை காப்பது மற்றும் வேட்டையாடுபவர்களை பிடிப்பது மற்றும் மீனவர்களுக்கு உதவுவது போன்ற பணிகளை கடலோர காவல்படை மேற்கொண்டு வருகிறது.

இது மட்டுமல்லாமல் கடல் கொள்ளையர்களை தடுக்கும் நடவடிக்கைகளையும் இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது என்றாலும், இது கடற்படை மற்றும் பிற நாடுகளின் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது" என்றார். தொடர்ந்து, கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கடற்கரை காவல் நிலையங்களின் செயல்பாடுகள், உபகரணங்கள் மற்றும் பல்வேறு தகவல்களை மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதில் காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், தலைமை காவலர் கோபால், காவலர்கள், ஆசிரியர்கள், புதுப்பட்டினம் அபு மெட்ரிக் பள்ளி, சேதுபாவாசத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story