கே.வி.குப்பம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்!

கே.வி.குப்பம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்!

ஆட்டு சந்தை

கே.வி.குப்பம் சந்தையில் ஆடுகள் விற்பனை கடந்த வாரத்தை விட இந்த வாரம் மந்தமாக இருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தை மேட்டில் ஆட்டு சந்தை நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த வாரம் ஆடுகள் வரத்தும், வியாபாரமும் அதிக அளவில் இல்லை. ஒரு ஆட்டுக் கடா ரூ.16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையும், குட்டிகள் ரூ.7 ஆயிரம் முல் 10 ஆயிரம் வரையும் விலை போனது. கடந்த வாரத்தைவிட இந்த வாரம் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story