உத்தமசோழபுரத்தில் ரூ.4.5 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
கொப்பரை தேங்காய் ஏலம்
சேலம் உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ.4.5 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் விற்பனையானது.
சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் இணையதளம் வாயிலாக நடைபெற்றது. இதில் விவசாயிகள் மற்றும் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட்சமாக ரூ.76-க்கும் அதிகபட்சமாக ரூ.94-க்கும் விற்பனையானது. மொத்தம் 124 மூட்டை கொப்பரை தேங்காய் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்திற்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணி தெரிவித்தார்.
Next Story