உத்தமசோழபுரத்தில் ரூ.5.72 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

உத்தமசோழபுரத்தில் ரூ.5.72 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய்  

உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ.5.72 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் விற்பனையானது.
சேலம் அருகேமறைமுக ஏலம் தேசிய வேளாண் மின்னணு சந்தை என்ற இணையதளம் மூலம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், சேலம், நாமக்கல், ஈரோடு, காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர். கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட்சமாக ரூ.72-க்கும், அதிகபட்சமாக ரூ.94-க்கும் விற்பனையானது. மொத்தம் சுமார் 6¼ டன் அளவுள்ள 155 மூட்டை கொப்பரை தேங்காய் ரூ.5 லட்சத்து 72 ஆயிரத்திற்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணி தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story