வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணியில் கரப்பான்பூச்சி

வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணியில் கரப்பான்பூச்சி

பிரியாணியில் கரப்பான் பூச்சி


திண்டுக்கல் முத்தழகுபட்டியைச் சேர்ந்தவர் விமல். இவர் நேற்று பிற்பகல் தெற்கு ரத வீதியில் உள்ள வேணு பிரியாணி ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அங்கு பிரியாணி ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார். பசியோடு இருந்த அவருக்கு பரிமாறப்பட்ட பிரியாணியை சாப்பிட தொடங்கினார்.

அப்போது அதில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், ஊழியர்கள் மற்றும் ஓட்டல் நிர்வாகத்தினரிடம் தெரிவித்தார். ஆனால் ஓட்டல் நிர்வாகத்தினர் அலட்சியமாக பதில் அளித்தனர். இதனால் அவர் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

சாப்பிட்டதற்கு பணம் தர வேண்டாம் என்று நிர்வாகம் சார்பில் சமாதானம் செய்ய முயன்றனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஓட்டலில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story