தென்னை தொழில் மேம்பாட்டு கருத்தரங்கம்

ராமநாதபுரம் தென்னை நார் தொழிலின் நிலையான வளர்ச்சிக்கான, மேம்பாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய கருத்தரங்கு நடைபெற்றது.

ராமநாதபுரம் தென்னை நார் தொழிலின் நிலையான வளர்ச்சிக்கான, மேம்பாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கயிறு வாரிய தலைவர் குப்புராமு செய்தியாளர்களிடம் பேசியபோது,

நமது நாட்டில் கிடைக்கின்ற தென்னை மரங்களில் இருந்து தென்னை விவசாயிகள் 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றனர்.மீதமுள்ள 70% வேஸ்டாகவிட்டு விடுகின்றனர்.குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான தென்னை விவசாயிகள் தேங்காயை மட்டும் பயன்படுத்திவிட்டு தென்னை கழிவுகளை ரோட்டோரம் கொட்டி வைத்து தீ வைத்து கொழுத்தி விடுகின்றனர்.

இந்த வேஸ்டான 70 சதவீதம் தென்னை நார்களை மதிப்பு கூட்டு மூலப்பொருளாக பயன்படுத்தி பெண்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் விதமாக இதில் கிடைக்கும் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் பல்லாயிரம் கோடி வருவாய் ஈட்டலாம் மேலும் தற்பொழுது இந்த குப்பை தென்னை நாரிலிருந்து ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு நமது துறையின் மூலம் கிடைக்கிறது நமது கயிர் வாரிய மாநிலங்களில் வாரியத்தின் மூலம் 14 மாநிலங்களில் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் மிகச் சிறந்த தொழிற்சாலை அமைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சென்று கேட்டேன் அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் தொழிலில் பெருக்கினால் நமது நாட்டிற்குத்தான் நல்லது.

இதனால் வீட்டில் இருக்கும் பெண்களுடைய வாழ்வாதாரம் உயரும் தற்போது உள்ளூர் சந்தையில் நமது கயிறு வாரிய பெரும்பங்கு வகிப்பதுடன் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் என்றார்.

Tags

Next Story