வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை சரிவு

வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை சரிவு

தேங்காய் 

சேலம் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை டன்னுக்கு ரூ.4000 விலை சரிந்து விற்பனையானது.

தமிழகத்தில் பொள்ளாச்சி, சேலம், உடுமலைப்பேட்டை, பெருந்துறை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகளவு உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் அய்யப்பன் சீசன் எதிரொலியாக தேங்காய் வரத்து குறைந்து விலை சற்று அதிகரித்தது. தற்போது கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் தேங்காய் விலை சரிய தொடங்கி உள்ளது. இதனால் சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ தேங்காய் ரூ.32 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து சேலம் தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:- கடந்த ஆண்டு பரவலாக பெய்த மழையால் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 500 முதல் 600 டன் தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இதனை சில்லரை வியாபாரிகள், கடைக்காரர்கள் வாங்கி சென்று விற்பனை செய்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு டன் தேங்காய் ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன்னுக்கு ரூ.4 ஆயிரம் சரிந்தது. இதன் காரணமாக ஒரு டன் தேங்காய் ரூ.26 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விலையில் சிறிய தேங்காய் ரூ.8-க்கும், நடுத்தர அளவு ரூ.10 முதல் ரூ.15-க்கும், பெரிய தேங்காய் ரூ.18 முதல் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story