ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம்
தேங்காய் பருப்பு
Omalur
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தமிழ்நாடு அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கடந்த இரண்டு நாட்களாக 9 விவசாயிகள் 52 மூட்டைகளில் 21.51குவிண்டால் அளவிற்கு விவசாயிகள் தேங்காய் பருப்புகளை கொண்டு வந்தனர். அப்படி கொண்டு வந்த தேங்காய் பருப்புகள் ஏலம் விடப்பட்டது. இதில் மொத்தம் 1லட்சத்து 70ஆயிரத்து 71ரூபாய் 88காசுகளுக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்ச விலையாக 87ரூபாய் 99காசுக்கும், குறைந்தபட்ச விலையாக 66ரூபாய் 99காசுக்கும், சராசரி விலையாக 86ரூபாய் 99காசுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டது எனவும், அப்படி நிர்ணயம் செய்த விலைக்கு 3 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்கி சென்றதாக வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தகவல் தெரிவித்தார்.
Tags
Next Story