வேகமாக வீசிய காற்றால் மின்கம்பம் மீது சாய்ந்த தென்னை மரம்.
மின்கம்பத்தை சரிசெய்யும் பணி
பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நேற்று மாலை திடீரென வீசிய பலத்த காற்றில் தென்னைமரம் ஒன்று ஒடிந்து எதிரே இருந்த மின் கம்பி மீது சிக்கி பழைய பைபாஸ் சாலையின் நடுவே விழுந்தது. இதில் மின் கம்பம் ஒடிந்து அங்கு சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த இறந்தவர்களை இடு காட்டிற்கு ஏற்றி செல்லும் தனியாருக்கு சொந்தமான ரத ஊர்வலம் வாகனத்தில் விழுந்தது.
நேற்று மாலை வாரச்சந்தை கடைகள் வைத்திருந்தவர்கள் மற்றும் வாரச்சந்தைக்கு வந்து கொண்டிருந்த பொதுமக்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து அங்கு வந்த மின் வாரியத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் நடுவே விழுந்து கிடந்த தென்னை மரத்தை அகற்றி பின்னர் ரத வாகனத்தின் மேல் ஒடி கிடந்த மின் கம்பத்தை ஜே.சி.பி வாகனம் மூலம் அகற்றினர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தென்னைமரம் ஒடிந்து போக்குவரத்து அதிகம் உள்ள சாலை மட்டும் அல்லாது வாரச்சந்தைக்கு வந்து கொண்டிருந்த பொதுமக்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.