காரிமங்கலம் சந்தையில் 18 லட்சத்திற்கு தேங்காய்கள் விற்பனை

காரிமங்கலம் சந்தையில் 18 லட்சத்திற்கு தேங்காய்கள் விற்பனை

தேங்காய் விற்பனை

காரிமங்கலம் வாரச்சந்தையில் அளவை பொறுத்து 7 ரூபாய் முதல் 11 ரூபாய் வரையில் தேங்காய் விற்பனை செய்யப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். வார சந்தை நடைபெறும் ஒரு நாளுக்கு முன்பாகவே பிரத்யேகமாக திங்கட்கிழமை மதியம் முதல் தேங்காய் விற்பனைக்காக தேங்காய் சந்தை நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களிலும் ஏராளமான விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்காக நேற்று கொண்டு வந்தனர் தற்போது பல்வேறு கோவில் திருவிழாக்கள் நடைபெற உள்ளதால் தேங்காய் விற்பனை சூடு பிடித்திருந்தது. ரகம் மற்றும் அளவைப் பொறுத்து ஒரு தேங்காய் 7 ரூபாய் முதல் 11 ரூபாய் வரையில் விற்பனையானது நேற்று ஒரே நாளில் சுமார் 18 லட்ச ரூபாய்க்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

Tags

Next Story