ஏற்காட்டில் தோட்டக்கலை மாணவர்களுக்கு காபி சாகுபடி பயிற்சி
காபி சாகுபடி பயிற்சி
ஏற்காட்டில் தோட்டக்கலை மாணவர்களுக்கு காபி சாகுபடி பயிற்சி தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தில் நடந்தது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தோட்டக்கலை 4-ம் ஆண்டு படிக்கும் மாணவ- மாணவிகள் காபி சாகுபடி குறித்த பயிற்சிக்காக ஏற்காடு வந்தனர். 5 நாட்கள் நடந்த பயிற்சியை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் கோ.மாலதி தொடங்கி வைத்தார். பயிற்சியில் காபி ரகங்கள், இனப்பெருக்க முறைகள், நாற்றங்கால் மேலாண்மை, ஒருங்கிணைந்த சாகுபடி தொழில் நுட்பங்கள், ஒருங்கிணைந்த உர நிர்வாக முறைகள், மண்வள மேலாண்மை முறைகள், ஒருங்கிணைந்த பூச்சிநோய் மேலாண்மை முறைகள், வேளாண் கழிவு பொருள், மேலாண்மை முறைகள், வறட்சி மேலாண்மை முறைகள், அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்பங்கள், மதிப்பு கூடுதல் தொழில்நுட்பங்கள் குறித்த அனைத்து தொழில்நுட்பங்களும் பயிற்சியாகவும், செயல் விளக்கங்களாகவும் கொடுக்கப்பட்டன. பின்னர் மாணவ- மாணவிகள் ஏற்காடு காபி வாரியத்துக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய சுற்றுப்புற சூழல் துறை பேராசிரியர் சாரா பர்வீன் பானு, பூச்சியியல் இணை பேராசிரியர் செந்தில் குமார் ஆகியோர் செய்திருந்தனர். கோவை தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், மோகன், லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story