Coffee with Collector – கலந்துரையாடல் நிகழ்ச்சி

Coffee with Collector – கலந்துரையாடல் நிகழ்ச்சி
X
Coffee with Collector’ – சிறு, குறு, நடுத்தர தொழில்புரிவோர் மற்றும் தொழில்முனைவோர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி புதிய தொழில்கள் தொடங்குதல், புத்தாக்கம், தொழில்களில் புதுமைகளைப் புகுத்துதல், தொழில் வளர்ச்சி, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில்களை புதிய உத்திகள் மற்றும் சிந்தனைகள் மூலமாக மேம்பாடு அடையச் செய்தல், புதிய நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் சந்தை வாய்ப்புகள் சார்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறு, குறு, நடுத்தர தொழில்புரிவோர் மற்றும் தொழில்முனைவோர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். புத்தாக்கம் மற்றும் புதுத்தொழில் தொடங்குதல் சார்ந்து தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் மற்றும் நிதியுதவிகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தை தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக திகழச் செய்திடத் தேவையான தொடர் நடவடிக்கைகளை அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்குத் தேவையான ஒத்துழைப்பு மாவட்ட நிர்வாகம் மூலம் முழுமையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினோதினி, தமிழ்நாடு புத்தாக்கம் மற்றும் புத்தொழில் இயக்க மதுரை வட்டார மைய ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story