"Coffee with collector " எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி

X
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளம்தொழில் முனைவோர்களுடன் "Coffee with collector " எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்குதல், புத்தாக்கம், தொழில்களில் புதுமைகளைப் புகுத்துதல், தொழில் வளர்ச்சி, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில்களை புதிய உத்திகள் மற்றும் சிந்தனைகள் மூலமாக மேம்பாடு அடையச் செய்தல், புதிய நிறுவனங்களை நிறுவுதல், சந்தை வாய்ப்புகள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு சிறப்பாக பங்களிப்பை வழங்குவதற்கான திட்டங்கள் வகுத்தல் சார்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) வினோதினி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

