‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி

X
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியருடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. மாணவ/மாணவியருடன் கலந்துரையாடி அவர்களின் ஆர்வம், உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்து உரிய வழிகாட்டுதல்கள் வழங்கினார். மேலும், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினோதினி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பிரபாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

