காபி வித் கலெக்டர்: பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர்

காபி வித் கலெக்டர்: பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர்

மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர்

காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காபி வித் கலெக்டர் என்ற நிகழ்வில் அரசு பள்ளிமாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா மாவட்ட ஆட்சியரிடம் கலெக்டராக வேண்டும் டாக்டர் ஆக வேண்டும் இன்ஜினியராக வேண்டும் ராணுவத்தில் பணி புரிய வேண்டும் என்று மாணவிகள் தங்கள் வருங்கால இலட்சியத்தை ஆட்சியரிடம் மகிழ்ச்சியுடன் எடுத்துக் கூறி கலந்துரையாடினர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஆறு மாதமாக காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 30க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா மாதம் ஒருமுறை கலந்துரையாடும் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 30க்கு மேற்பட்டோர் பங்கு பெற்ற காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நான் எப்படி படித்தேன் என்னுடைய குடும்ப சூழ்நிலை என்ன என்பது குறித்து மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

மேலும் மாணவிகள் தங்கள் வருங்கால லட்சியம் என்ன என்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஒவ்வொருவராக எடுத்துக் கூறி வந்த பொழுது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பள்ளி மாணவிகள் மருத்துவராக வேண்டும் கிராமப்புறங்களில் மருத்துவ பணிகள் சேர வேண்டும் கலெக்டராக வேண்டும் இன்ஜினியராக வேண்டும் என கூறிவந்த நிலையில் ஒரு மாணவி ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்றும் கூறி அசத்தினார்.

இந்த நிகழ்வில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு தங்கள் துறையின் செயல்பாடுகள் என்ன என்பது குறித்து மாணவியரிடத்தில் விளக்கமாக எடுத்துக் குறி பேசினர் மேலும் மாணவிகளின் சந்தேகங்கள் மற்றும் அவர்களின் தேர்வு பயங்களை போக்கும் விதத்தில் மனநல மருத்துவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து மாணவியுடன் கலந்துரையாடினர்.

Tags

Next Story