காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி
 காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் 70 வது கலந்துரையாடல் நடைபெற்றது.
காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் 70 வது கலந்துரையாடல் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, மக்களவைத் தேர்தல் 2024 எதிர் வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி, அறிவியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் பயிலும் இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று 70-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

வெளிப்படையான, நியாயமான முறையில் பொதுமக்களுடைய பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் தெரிவுமுறைக்கு பெயர்தான் தேர்தல். இளம் வாக்காளர்கள் மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்கள், இந்திய தேர்தலின் வரலாறு குறித்தும், தேர்தலில் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவம் குறித்தும், ஜனநாயக கடமையை எல்லோரும் ஆற்ற வேண்டும் என்பதின் முக்கியத்துவம் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்திய ஜனநாயக தேர்தலில் பணம் பரிசுப் பொருள்கள் பெற்று வாக்குகளை பெறுவது, வன்முறை சூழல்களை ஏற்படுத்தி மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, தவறான தகவல்களை பரப்புவது போன்ற மூன்று சவால்களை இந்திய தேர்தல் ஆணையம் எதிர்கொள்கிறது.

ஜனநாயகத்தின் உடைய மிக முக்கியமான வாய்ப்பு நமக்கு வாக்குரிமை தான். குறிப்பாக இளம் தலைமுறை வாக்காளர்கள், முதல் முறை வாக்காளர்கள் முழுமையாக தங்களது வாக்கு உரிமையை நிறைவேற்ற வேண்டும். நமக்கான ஒரே வாய்ப்பு ஜனநாயக பொறுப்பு என்பது வாக்கை செலுத்துவதுதான். இளம் தலைமுறை வாக்காளர்கள் இந்திய ஜனநாயகத்தின் தேர்தல் பற்றிய வரலாற்றையும், அதன் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். இன்றைய சூழ்நிலையில், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நிறைய தகவல்கள் வருகின்றன. அந்த தகவல்களில் எது சரி என்பதை நாம் சற்று தேர்ந்த பார்வையோடு பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். நீங்கள் தெளிவான பார்வையுடன் சற்று முயற்சி செய்தால் தெளிவான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

மாணவர்கள் முதலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் யாருக்கு எதற்காக வாக்களிக்கிறோம் என்று நன்கு அறிந்து வாக்களிக்க வேண்டும். பணம், பொருள் எதுவும் பெறாமல் யார் தகுதியானவர்கள் என்று அறிந்து வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பதன் அவசியத்தை தங்களது பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் உள்ளவர்களிடம் எடுத்துக்கூறி, தகுதியான நேர்மையான நபர்களுக்கு வாக்களிக்க செய்து ஒரு வலுவான ஜனநாயகம் உருவாவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Tags

Next Story