விருதுநகர்: காபி‌ வித் கலெக்டர்

விருதுநகர்: காபி‌ வித் கலெக்டர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ‘Coffee With Collector” என்ற 61-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ‘Coffee With Collector” என்ற 61-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், 4 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தேர்வு செய்து அதில்; பயிலும் 40 மாணவ / மாணவியர்களுடனான “Coffee With Collector” என்ற 61-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 61-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும்.

எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும். தமிழ் ஆர்வத்தை வளர்த்தல், சிறுகதை படைத்தல், படைப்பிலங்கியங்கள்;, தமிழ் அறிஞர்கள் குறித்தும் கல்லூரி மாணவ / மாணவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கலந்துரையாடினார்.

அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள்; உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர். .

Tags

Read MoreRead Less
Next Story