காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி 50-வது கலந்துரையாடல் நடைபெற்றது

காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி 50-வது கலந்துரையாடல் நடைபெற்றது
காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி 50-வது கலந்துரையாடல் நடைபெற்றது
மாணவர்களுடன் எழுத்தாளர் பெருமாள் முருகன் கலந்துரையாடினார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மற்றும் தமிழ் இலக்கியத்தில் படைப்பாற்றல் ஆர்வமிக்க 250 பள்ளி மாணவர்களுடனான “Coffee With Collector” என்ற 50-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் புக்கர் விருதுக்கான நீளப்பட்டியலில் இடம்பெற்ற தமிழ் எழுத்தாளர், ஜே.சி.பி இலக்கிய இலக்கிய விருதாளர் திரு.பெருமாள் முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது, மாணவர்களை சந்தித்து பேசுவது ஆசை. நிறைய விஷயங்களை மாணவர்களிடம் கற்றுக்கொண்டேன். பல சந்தர்ப்பங்களில் மாணவர்கள் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கற்றுக்கொள்வதற்கான பக்குவம் வேண்டும். அலைபேசி என்பது அற்புதமான கருவி. அதனை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். நாம் தயாராக இருந்தோம் என்றால் நிறைய கற்றுக்கொள்ளலாம். மாணவர்களுக்கு எதில் ஈடுபாடு உள்ளது என்ற விஷயங்களை ஆசிரியர்கள் தெரிந்து கொண்டால், மாணவர்களுடன் உறவு மேம்படும்.

எந்த துறையில் ஈடுபாடு உள்ளதோ அந்த துறையில் சாதிக்கலாம். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் விருப்பத்திற்கு முட்டுக்கட்டையாகக் கூடாது. எந்த துறையாக இருந்தாலும் சிறப்பாக செயலாற்ற வேண்டும். ஆங்கிலத்திற்கு அடுத்து உலகத்தில் அதிகப்படியாக இணையதளத்தில் தேடக்கூடிய மொழி நம்முடைய தமிழ் மொழிதான். பல தலைவர்கள் முயற்சியால் இன்று அனைவருக்கும் கல்வி கிடைத்துள்ளது மற்றும் புத்தகம் வாசிப்பு பழக்கம் அதிகரித்துள்ளது. அறிவு சார்ந்த தேடலும் தற்போது புத்தக வாசிப்பை பழக்கத்தை அதிகரித்துள்ளது.

திருக்குறளின் பொருளை அறிந்து படித்தால் அனைத்து குறளையும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். அறிவு சார் சொத்து என்பது புத்தகம் தான். அறிவுச் செல்வம் புத்தகம் தான். அனைவரது வீட்டிலும் சமையலறை, குளியலறை இருப்பது போல் புத்தக அறை இருக்க வேண்டும் என எழுத்தாளர் திரு.பெருமாள் முருகன் அவர்கள் தெரிவித்தார். மேலும், மாணவர்களுடைய தமிழ் ஆர்வத்தை வளர்ப்பது, தமிழ் இலக்கியங்களை படிப்பது, தமிழில் ஆளுமை மிக்க மனிதர்களாக வளர்வது பற்றி விரிவுரையாற்றினார். மாணவர்கள் அவர்களிடத்தில் தங்களுக்கான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

Tags

Next Story