காபி வித் கலெக்டர் !
மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில், விருதுநகரில் காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சியின் 56வது கலந்துரையாடல் நடந்தது.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்துரையாடும் நிகழ்ச்சி காப்பி வித் கலெக்டர். இந்த நிகழ்ச்சியின் 56வது கலந்துரையாடல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு பயிலும் 30 மாணவ மாணவியர்களுடனான “ மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் தெரிவித்தார்.