கோவை அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் ஆணையரிடம் மனு

கோவை அண்ணா மார்க்கெட்  வியாபாரிகள் சங்கத்தினர் ஆணையரிடம் மனு

மனு அளிக்க வந்த வியாபாரிகள்

கோவை அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் ஆணையரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அண்ணா மார்க்கெட் அனைத்து சங்கம் வியாபாரிகள் கடந்த 36 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர்.

வருடாந்திர குத்தகைக்கான ஒப்பந்த புள்ளி அறிவிக்கப்படாத நிலையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு அளித்து இருந்தனர்.மாநகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்டில் உள்ள கடைகள் புனரமைப்பு செய்து மீண்டும் ஏற்கனவே வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கே கடைகள் மீண்டும் ஒப்படைக்கப்படும் அதுவரையில் மார்க்கெட் வியாபாரிகள் மேற்படி மார்க்கெட் வளாகத்திலேயே புணரமைப்பு பணிகள் செய்வதற்கு இடையூறு இல்லாதபடிக்கு தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து கொள்ளலாம் என்று வாக்குறுதி அளித்து இருந்தனர்.

இந்நிலையில் கோவை உக்கடம் ராமர் கோவில் வீதியில் அமைந்துள்ள மார்க்கெட்டிற்கான 2024- 2025 ,2026 - 2027 ஆண்டிற்கான வருடாந்திர குத்தகை ஒப்பந்த புள்ளி அறிவிக்கப்பட்டு தினசரி நாளிதழில் பொது அறிவிப்பு வெளியாகி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கே கடைகள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர்கள் அளித்த வாக்குறுதியின்படி அண்ணா மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு நடப்பாண்டிற்கு கடைகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story