கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: துவக்கி வைக்கும் மோடி

கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: துவக்கி வைக்கும் மோடி

கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளார். 

கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளார்.

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஒசூர் வழியே பெங்களூருக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் (20642,20641) சேவை வரும் 1ம் தேதி முதல் (வியாழக்கிழமை தவிர) இருமார்க்கத்திலும் துவங்குகிறது. இந்த ரயிலின் துவக்க விழா நாளை (30ம் தேதி) காலை 11 மணிக்கு கோவை ரயில்வே ஸ்டேஷனில் நடக்கிறது.

பிரதமர் நரேந்திரமோடி காணொலி மூலம் பங்கேற்று, கோவை- பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20642) ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, எம்பி, எம்எல்ஏக்கள் கலந்துகொள்கின்றனர். நாளைய தினம் கோவையில் காலை 11 மணிக்கு புறப்படும் துவக்கவிழா வந்தே பாரத் ரயில், திருப்பூருக்கு காலை 11.45க்கும், ஈரோட்டிற்கு மதியம் 12.32க்கும் வந்து சேலத்திற்கு மதியம் 1.29 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், 2 நிமிடத்தில் புறப்பட்டு தர்மபுரிக்கு பிற்பகல் 2.51க்கும், ஓசூருக்கு மாலை 4.23க்கும் சென்று பெங்களூருக்கு மாலை 6.30 மணிக்கு சென்றடைகிறது. 8 பெட்டிகள் கொண்ட இந்த துவக்கவிழா சிறப்பு ரயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இதர பயணிகள் பயணிக்கவுள்ளனர்.

Tags

Next Story