சாலை விபத்தில் அரசு பேருந்தில் சிக்கிய தம்பதி - அடுத்து நடந்தது என்ன..?

சாலை விபத்தில் அரசு பேருந்தில் சிக்கிய தம்பதி - அடுத்து நடந்தது என்ன..?

சாலை விபத்தில் சிக்கிய தம்பதியினர்

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மீதி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்துள்ள சாணாம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் எட்வின். இவரது மனைவி ஸ்டெபி ரோஜா. எட்வின் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் எட்வின் வீட்டில் இருந்து கோவை செல்வதற்காக தனது டூவீலரில் மனைவியுடன் சென்றுள்ளார்.

அன்னூர் - சத்தி சாலையில் சிஎஸ்ஐ சர்ச் அருகே சென்ற போது அருகில் இருந்த தெருவில் இருந்து வெளியே வந்த மற்றொரு டூவீலர் சாலையை கடக்க முயன்ற போது தம்பதியர் வந்த டூவீலர் மீது மோதியுள்ளது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

அதேநேரம் கோவையில் இருந்து சத்தி நோக்கிச்சென்ற அரசுப் பேருந்தில் டூவீலர் சிக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தினார். இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும் எட்வினின் கை பேருந்து சக்கரத்தில் சிக்கியதில் முழுமையாக சேதமடைந்தது. உடனடியாக இருவரையும் மீட்ட பொதுமக்கள் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் விபத்து குறித்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story