கோவை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை சைகை மூலம் பிரச்சாரம்...

கோவை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை சைகை மூலம் பிரச்சாரம்...

அண்ணாமலை 

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தின் இறுதி பகுதிக்கு செல்ல 10 மணி நடந்ததால் நேரம் கடந்து விட்டதாக சைகை காட்டிவிட்டு பேசாமல் சென்றார்.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தின் இறுதிப் பகுதிக்கு செல்ல 10 மணியை கடந்ததால் நேரம் கடந்து விட்டதாக சைகை காட்டி விட்டு பேசாமல் சென்றார். கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் பகுதிகளில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார் காலை மாதப்பூர் பகுதியில் துவங்கிய பிரச்சாரம் ஒரே நாளில் பல்லடம் சட்டமன்ற தொகுதியை முடிக்கும் விதமாக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை பிரச்சாரத்தின் இறுதி பகுதியான சிட்கோ பகுதிக்கு செல்லும் பொழுது 10 மணியை கடந்து விட்டது இதனால் அங்கு தேர்தல் விதிமுறைகளின் படி பேச முடியாததால் நீண்ட நேரம் காத்திருந்த தொண்டர்களுக்கு சைகை மூலம் 10 மணி கடந்து விட்டது என தெரிவித்து விட்டு கைகளை மட்டும் அசைத்து வணங்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags

Next Story