கோவை விழா - ஆர்ட் ஸ்ட்ரீட்டை கண்டு களித்த பொதுமக்கள்

கோயம்புத்தூர் விழாவை முன்னிட்டு நடந்த கலை தெரு நிகழ்ச்சியில் காட்சிபடுத்தப்பட்ட கலை படைப்புகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
கோயம்புத்தூர் விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக நடத்தப்படும் கலை தெரு (Art street) கோவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இந்த ஆண்டும் கலை தெரு துவங்கி உள்ளது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெறும் இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தில் உள்ள கலைஞர்களின் கலைபடைப்புகள் இங்கு காட்சிபடுத்தி உள்ளனர். இந்நிகழ்வை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்,மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சி ரேஸ்கோர்ஸ் ஸ்கீம் சாலையில் நடைபெறுகிறது.இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களது கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். இதில் மணல் ஓவியங்கள், புராண உருவங்களின் சுவரோவியங்கள்,ரெட்ரோ ஓவியங்கள்,பிச்சுவாய் பெயிண்டிங்,கேலிகிராபி, 3டி மாடலிங்,காமிக் ஸ்ட்ரிப், குரோச்செட்,களிமண் கலை மண்பாண்டங்கள், மூங்கில் கூடை போன்ற பல்வேறு வகையான கலை படைப்புகள் கிரியேட்டிவ் கேலிகிராபி,3-டி மோல்ட்ஸ் மற்றும் குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்களின் உருவப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் குழந்தைகளுக்கான ஓவிய பயிற்சி பட்டறையும் நடத்தப்படுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story