கோயம்புத்தூர் விழா : சிறப்பு பாரா ஸ்போர்ட்ஸ்

கோவை விழாவையொட்டி நடந்த மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
கோவை மாநகர் முழுவதும் கோயம்புத்தூர் விழா தொடர்ந்து விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.நாள்தோறும் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.இதில் குண்டு எறிதல்,டேபிள் டென்னிஸ்,ஓட்டப்பந்தயம், பார்வையற்றோர் கால்பந்து போட்டி போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இந்த நிகழ்வை கோவை (வடக்கு) காவல் துணை ஆணையர் சந்தீஸ், கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளியின் நிறுவனர் தீபா மோகன்ராஜ் துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்ற பல்வேறு வீரர்கள் கலந்து கொண்டு மாற்றுதிறன் குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.

Tags

Next Story