திமுகவில் இணைந்த முதல் முறை வாக்காளர்கள்

கோவை பாராளுமன்ற தொகுதியில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள 25 இளைஞர்கள் மற்றும் அதிமுக,பாஜக,அமமுக கட்சிகளை சேர்ந்த 125 மாற்று கட்சியினர் என 150 பேர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
கோயமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கீரணத்தம் ஊராட்டி ஐ.டி.பார்க் அருகே திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்வில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்கள் 25 இளைஞர்கள் மற்றும் மாற்று கட்சியை சேர்ந்த 125 பேர் என மொத்தம் 150 பேர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களை வரவேற்ற அமைச்சர், நீட் தேர்வு ரத்து விஷயத்தில் திமுகவின் தொடர் செயல்பாடு குறித்தும் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து அவர்கள் மத்தியில் பேசினார். இந்த நிகழ்வில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் மகேந்திரன்,திமுக மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் அசோக்பாபு ஆறுகுட்டி,ஒன்றிய செயலாளர் எஸ்.பி.சுரேஷ்குமார்,ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்(எ)பழனிச்சாமி,ஒன்றிய கவுன்சிலர் கருப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story