புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை

புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை

பாலகுமார்

கோவை கணபதி மாநகர் பகுதியில் புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை:சரவணம்பட்டி புலனாய்வு பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வரும் பாலகுமார்(38) கணபதி மாநகர் பகுதியில் வசித்து வருகிறார்.இவரது மனைவி தாஜ் குழம ஹோட்டல்களில் பணிபுரிந்து வரும் நிலையில் பதவி உயர்வு கிடைக்க பெற்று 15 நாட்களுக்கு முன்பு லண்டனில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு அனுப்பப்பட்டார்..இந்த நிலையில் இரு குழந்தைகளையும் சேலத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் பாலகுமார் விட்டுச் சென்றுள்ளார்.இதனிடையே மனைவி சுமதியுடன் தொலைபேசியில் பேசியபோது சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் பணியில் கலந்து கொண்ட கடந்த ஏப்ரல் 20ம் தேதி காலை வீட்டிற்கு திரும்பி உள்ளார் .சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் வேலைக்கு வராத நிலையில் அவரது பெற்றோரும் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் சரவணம்பட்டி காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்து உள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று இரவு பாலகுமாரின் வீட்டிற்கு இரவு சென்ற போலீஸார் பாலகுமாரன் தூக்கில் தற்கொலை செய்து கொண்டதை கண்டறிந்துள்ளனர்.அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story