5 நாட்கள் தொடர் சிகிச்சை - வனம் புகுந்த தாய் யானை

5 நாட்கள் தொடர் சிகிச்சை - வனம் புகுந்த தாய் யானை

வனத்திற்குள் சென்ற யானை

ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தாய் யானையின் உடல்நலம் சீரானது. இதையடுத்து அடர்ந்த வனப்பகுதிக்கு யானையை வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை கண்டறியப்பட்டு தொடர்ந்து அந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்தனர்.உடல்நலம் பாதிக்கப்பட்ட யானையுடன் நான்கு மாத ஆண் குட்டி யானையும் இருந்ததால் குட்டி யானையை வைத்துக் கொண்டே சிகிச்சையானது அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானையை கிரேன் வாகனத்தின் உதவியுடன் தூக்கி நிறுத்தப்பட்டு சிகிச்சையை தொடர்ந்து அளிக்கபட்டது.

யானைக்கு சத்து மாத்திரைகளை புளி வெல்லம் ஆகியவற்றுடன் இடித்து அரிசி சோற்றில் வைத்து உணவு அளிக்கபட்டது. நேற்றைய தினம் குட்டி யானை அங்கிருந்து சென்ற நிலையில் அந்த குட்டி யானையை கண்காணிக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்றது.இந்த நிலையில் நான்காவது நாளாக நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்பொழுது அந்த யானை தாமாக உண்ண துவங்கி உள்ள நிலையில் கிரேன் உதவியில்லாமல் நடந்து செல்லும் வரை இந்த சிகிச்சைகளானது தொடரும் என கால்நடை மருத்துவர்களும் வனத்துறையினரும் தெரிவித்த நிலையில் இன்று ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த யானையின் உடல்நலம் சீரானதை தொடர்ந்து வனத்துறையினர் அந்த யானையை காட்டிற்குள் அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து யானை கண்காணிக்கபடும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story