மானை விழுங்கிய மலைப்பாம்பு..! லாவகமாகப் பிடித்த தீயணைப்பு வீரர்கள்.!!

மானை விழுங்கிய மலைப்பாம்பு..! லாவகமாகப் பிடித்த தீயணைப்பு வீரர்கள்.!!

கோவையில் மலைபாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கோவை மாவட்டம் துடியலூர் அருகே மானை விழுங்கிய நிலையில் பிடிபட்ட மலைப்பாம்பு பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது.
கோவை துடியலூரை அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பயிற்சி பெற்று வரும் நிலையில். நேற்று சுமார் பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இரையை விழுங்கிவிட்டு நகர முடியாமல் வளாகத்தில் இருப்பதை வீரர்கள் பார்த்தனர். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு அவர்கள் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், மலைப் பாம்பை லாவகமாக பிடித்தனர்.அப்போது, அந்த பாம்பு குட்டி மானை விழுங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர் தீயணைப்புத்துறையினர் மலைப்பாம்பை மீட்டு வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story