இத்துபோன டப்பா கொலுசை கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது-அண்ணாமலை!

இத்துபோன டப்பா கொலுசை கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது-அண்ணாமலை!

அண்ணாமலை

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அதிமுக கொள்ளையடித்த லிஸ்ட்டை வெளியிடவா?
கோவை:இராமநாதபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கோவை தெற்கு தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது கோவை மக்களவைத் தொகுதி முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை பார்க்க முடிகிறது எனவும் ஒதுங்கி இருந்தவர்கள் கூட அரசியல் மாற்றம் வேண்டும் என வெளியே வருகின்றனர் என தெரிவித்தார். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் பொழுது கோயம்புத்தூர் ஒரு புரட்சி செய்யும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்த அவர் தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் தங்களது வேப்பமனுவை தாக்கல் செய்து இருக்கின்றனர் எனவும் 39 தொகுதிகளிலும் கூட தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதை களத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது என தெரிவித்தார். தமிழகத்தில் இருந்து பெருவாரியான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடி குறிப்பிட்ட 400 எம்.பிகளில் செல்வார்கள் என தெரிவித்த அவர் பா.ஜ.க குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு எதிர்வினையாற்றிய அண்ணாமலை அரசியலில் திமுக இருப்பதே ஒரு அவமானம் எனவும் திமுக 1967ல் ஆட்சிக்கு வர ஆரம்பித்ததோ அப்போது இருந்தே விஞ்ஞான ஊழல்,குடும்ப ஆட்சி, வாக்குக்கு பணம் கொடுப்பது ஆகியவை திமுக வந்த பிறகுதான் உருவானது எனவும் இதனால்தான் தந்தை பெரியார் திமுகவை கடுமையாக எதிர்த்தார் எனவும் தெரிவித்தார். இன்று தனக்கென்று அடையாளம் எதுவும் இல்லாமல் ஒரு பொம்மை முதலமைச்சர் ஆக ஸ்டாலின் இருக்கின்றார் எனவும் இவருக்கு பிரதமர் மோடியை பற்றி பேச தகுதி இல்லை எனவும் தெரிவித்தார்.கடந்த 33 மாதங்களாக மக்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை முதல்வர் சொல்ல வேண்டும் எனவும் கோவை உட்பட தமிழக நகரங்களில் கஞ்சா இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா?போதை கலாச்சாரம் இல்லை என்பதை சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை,தமிழக அரசின் கடன் 8 லட்சத்து 23 ஆயிரம் கோடியை தாண்டி இருக்கின்றது எனவும் இந்திய அரசியலில் இது போன்ற ஆட்சி நடந்ததில்லை எனவும் தெரிவித்தார்.களம் மாற,மாற அவர்களுக்கு பயம் வருவது சகஜம் தான் எனவும் தெரிவித்தார். சில்லறை கட்சி என பா.ஜ.கவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம் செய்து இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை டி.ஆர்.பி.ராஜா தஞ்சாவூர்காரர் அவங்க அப்பா பணம் சம்பாதித்தது வைத்து இருக்கின்றார் அதை மட்டுமே வைத்து அரசியலுக்கு வந்திருக்கிறார் எனவும் தெரிவித்தார்.கோவை மக்களை சில்லறை என சொல்கின்றாரா டி.ஆர்.பி ராஜா என கேள்வி எழுப்பிய அவர் இத்துப்போன டப்பாவோ,கொலுசோ கொடுத்து கோவை மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என நினைக்கின்றனரா? என தெரிவித்தார். டிஆர்பி ராஜா போன்றவர்களுக்கு இந்த மண்ணில் எப்பொழுதும் இடம் கிடையாது எனவும் அவர்கள் ஈசல்,பூச்சி மாதிரி எனவும் ஈசல் பூச்சிகள் போல கோவைக்கு திமுக காரர்கள் வந்துள்ளதாகவும் சீக்கிரம் காணாமல் போவார்கள் என தெரிவித்தார். அண்ணாமலை கரூர்கார்ர் என அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் விமர்சனம் செய்து இருப்பது குறித்த கேள்விக்கு தந்தையின் எம்.எல்.ஏ.கோட்டோவை பயன்படுத்தி வந்தவர் அதிமுக வேட்பாளர் என தெரிவித்தார்.தான் 2002ம் ஆண்டு முதல் கோவையில் இருந்து வருவதாகவும் மனைவியுடன் கோவையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என தெரிவித்த அவர் அவரைப்போல கோட்டா சிஸ்டத்தில் வரவில்லை என தெரிவித்தார்.காலையில் எழுந்ததில் இருந்து இரண்டு கட்சி வேட்பாளர்களும் அண்ணாமலை மற்றும் பாஜக புராணம்,மோடி புராணம் பாடி கொண்டிருக்கின்றனர் எனவும் இங்கு படிக்க வரும் போது தகர டப்பாவை எடுத்து வரும் பொழுது என்ன மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கின்றேன் எனவும் எனக்கு அடையாளம் கொடுத்தது கோவை என்றவர் அந்த கோவைக்கு நல்லது செய்வதற்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.அதிமுக வேட்பாளரை போல அப்பாவை வைத்து கோட்டா சிஸ்டத்தில் நான் வரவில்லை எனக் கூறியவர் இரண்டு வேட்பாளர்களும் சின்ன பசங்க விளையாட்டில் இருக்கிறார்கள் எனவும் அந்த விளையாட்டிற்கு நான் வரவில்லை என்றார். கோவையினுடைய மாற்றத்திற்கு தீவிரவாத, போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் வருகின்றோம் எனவும் நாங்கள் வந்தவுடன் கோவைக்கு வளர்ச்சியை கொண்டு வருவோம் எனவும் தெரிவித்தார். கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அதிமுக கொள்ளையடித்த லிஸ்ட்டை வெளியே விடலாமா? அவர்கள் அனைத்திற்கும் 40 சதவீதம் கமிஷன் வாங்கியதை பேசலாமா? என கேள்வி எழுப்பிய அவர் ஊழலை பற்றி பேசுகின்ற மனிதனைப் பற்றி குறை கூறாதீர்கள் எனவும் 33 மாதமாக தமிழகத்தில் லஞ்ச உழலை பற்றி அதிகம் பேசிய ஒரு தலைவரை காட்டுங்கள் பார்க்கலாம் என தெரிவித்தார்.கோவைக்கு தேர்தலுக்காக 830 கோடி ஆல்ரெடி வந்து விட்டதாக பத்திரிகை செய்தி பார்த்ததாகவும் நாங்கள் சாமானிய மனிதர்கள் இதை எதிர்கொள்வோம் எனவும் ஆயிரம் கோடியை கொண்டு வந்து பணமழை பொழிந்தாலும் மக்களின் அன்பு மழை தேசிய ஜனநாயக கூட்டணி மீதுதான் இருக்கும் எனவும் தெரிவித்தார்.பாஜக எங்கிருக்கிறது என்று கேட்டவர் கருணாநிதி எனவும் இன்று பாஜகவை திமுக திட்டாத நாளில்லை எனக்கூறிய அவர் காலையில் இருந்து இரண்டு பங்காளி கட்சிகள் ஒன்றாக இணைந்து பிஜேபி வந்தால் மாற்றம் வந்துவிடும் வரவிடக்கூடாது என்பதற்காக பேசி வருகின்றனர் எனவும் தெரிவித்தார். 10 ஆண்டுகள் வலிமையான அமைச்சர்களாக இருந்து தங்களை வலிமையாக்கி கொண்டனர் எனவும் கோயம்புத்தூர் சூடாகி விட்டதா இல்லையா ? இரண்டு மூன்று டிகிரி வெப்பம் உயர்ந்திருக்கிறதா ? இல்லையா? எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.கோவை மாநகராட்சியில்,90 கவுன்சிலர்களை வைத்துக் கொண்டு பில்லூர்,சிறுவாணி அணைகளை வைத்துக்கொண்டு இத்தனை எம்எல்ஏக்கள் இருந்து கொண்டு பத்தாண்டு ஆட்சியில் இருந்தும் மக்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியவில்லை என்ன வளர்ச்சியை பேசுகின்றனர் அவர்கள் என கேள்வி எழுப்பினார்.ஸ்மார்ட் சிட்டி, நொய்யல் என எல்லா நலத்திட்டத்திற்கும் கொடுத்தவற்றை கொள்ளை அடித்து இருக்கின்றனர் எனவும் ஏன் ஒரு வேலையை செய்கின்றோம் என தெரியாமல் வேலையை செய்கின்றனர் எனவும் எங்கே ஏறினால் எங்கே இறங்குகின்றோம் என்பது தெரியாதபடியான பரம பதத்தைப் போல கோவை பாலங்கள் இருக்கிறது என தெரிவித்தார்.கோவையில் இருக்கும் பாலங்கள் கமிஷனுக்காக கட்டப்பட்டது எனவும் பாலங்கள் மூன்றடுக்காக கட்டியிருக்கலாம் வேறு சிந்தனையில் கட்டி இருக்கலாம் எனவும் ஆனால் எந்த சிந்தனையும் இல்லாமல் பாலங்கள் கட்டப்பட்டு இருக்கின்றது என்றவர் இவர்களால் கோவையின் வளர்ச்சி பின்தங்கி இருக்கிறது எனவும் தெரிவித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் குறித்து பேசலாமா என சொல்வது அதிமுகவிற்கான மிரட்டலா என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை மக்கள் சொல்வதை நான் சொல்கின்றேன் நான் யாரையும் மிரட்டவில்லை என தெரிவித்தார்.இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அண்ணாமலையை சிறைக்கு அனுப்புவோம் என அமைச்சர் ரகுபதி சொல்கிறார் இதுதான் மிரட்டல் எனக்கூறிய அவர் இரண்டு பேரும் சேர்ந்து கொண்டு எங்களை மிரட்டுகின்றனர் எனவும் கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை யார் வீட்டிலும் யார் ஆதரவாளர்கள் வீட்டிலும் நடைபெற்றது?பினாயில் வாங்கியதில் ஊழல் செய்தது யார்?கோவையில் கடந்த ஆட்சியில் 10 காண்ட்ராக்டர்களை உருவாக்கவில்லையா? அந்த கான்ட்ராக்ட்டர்களின் குடும்பத்தில் இருந்து கவுன்சிலர்களுக்கு நிற்கவில்லையா? என கேள்வி எழுபினார்.அண்ணாமலை என்ன செய்கின்றார் என்பதுதான் அனைவரின் பேச்சாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார். என்னுடைய வளர்ச்சிக்கு காரணமே என்னுடைய பேச்சு தான் என்றவர் கட்சி வளர்ச்சிக்கும் ஒரு காரணம் எனவும் ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகின்றேன் என்ற அவர் பொத்தி பொத்தி பேசுவதில்லை எனவும் இதனால் என் மீது 1230 கோடி ரூபாய்க்கு மானநஷ்ட வழக்கு போட்டு இருக்கின்றனர் என தெரிவித்தவர் ஸ்டாலின் என் மீதும் இபிஎஸ் மீதும் வழக்குகள் போட்டு இருக்கின்றார் இது எங்களுடைய தைரியமான செயல்பாட்டை காட்டுகிறது எனவும் தெரிவித்தார். சீட்டு கிடைக்காத எம்.பியும் அண்ணாமலை, அண்ணாமலை என்கின்றார் சீட்டு கிடைத்த திமுக,அதிமுகவினரும் என எல்லாரும் அண்ணாமலை அண்ணாமலை என்கின்றனர் என தெரிவித்தார். தருமபுரியில் போட்டியிடும் சௌமியா அன்புமணி வாரிசு அரசியலில் வரமாட்டார் எனவும் அவருக்கு தகுதி இருப்பதாக நான் பார்க்கிறேன் என தெரிவித்த அவர் பசுமை இயக்கத்திற்கு வேலை செய்து இருக்கிறார்கள் சௌமியாவிற்கு குழந்தை பிறந்து அந்த குழந்தைக்கு திருமணமாகி அந்த குழந்தைக்கு இருக்கும் போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள் அவர்களை வாரிசு அரசியலுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது என தெரிவித்தார்.இந்தியா முழுவதும் 51 சதவீத வாக்குகளை பா.ஜ.க பெறும் என்றவர் கோவை பாராளுமன்ற தொகுதியில் 60 சதவீத வாக்குகள் பா.ஜ.கவிற்கு கிடைக்கும் எனவும் களத்தில் அதற்காக நண்பர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.இந்தியா முழுவதும் 51 சதவீதம், கோவை பாராளுமன்ற தொகுதியில் 60% வாக்குகளை பெறுவோம் என தெரிவித்த அவர் கோவை அரசியல் களம் சிறப்பாக இருக்கிறது என்றும் வேட்புமனு தாக்கலுக்கு பின்பு மாநில முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கின்றேன் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story