595 மதிப்பெண் எடுத்த கோவை மாணவி

595 மதிப்பெண் எடுத்த கோவை மாணவி

பொதுத்தேர்வில் 595 மதிப்பெண் எடுத்த மாணவிக்கு சிவில் சர்விஸ் படிக்க ஆசை என கூறியுள்ளார்.


பொதுத்தேர்வில் 595 மதிப்பெண் எடுத்த மாணவிக்கு சிவில் சர்விஸ் படிக்க ஆசை என கூறியுள்ளார்.
கோவை சுந்தராபுரம் சிட்கோ பகுதியை சேர்ந்தவர்கள் சிவக்குமார்- பிந்து தம்பதியினர்.இவரது மகள் சௌபாக்கியா. கோவை ராஜ வீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு Accounts பிரிவு படித்து வந்தார்.பொதுதேர்வு முடிவில் சௌபாக்கியா 600 க்கு 595 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.அதில் மொழி பாடங்களை தவிர்த்து இதர நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த சௌபாக்யாவை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர். இந்த மதிப்பெண்கள் எடுத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தான் எதிர்பார்த்த மதிப்பெண் தான் வந்துள்ளதாக கூறிய அவர் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.மேலும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் ஆசைபடுவதாகவும் கூறியவர் தான் 12ம் படிக்கும் போது தொலைக்காட்சி மற்றும் செல்போனை தவிர்த்து பாடத்தில் கவனம் செலுத்தியதால் அதிக மதிப்பெண்களை பெற முடிந்ததாக தெரிவித்தார்.

Tags

Next Story