விரைவில் கோவை மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்க்க கூட்டம்

விரைவில் கோவை மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்க்க கூட்டம்

பைல் படம்


கோவை மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்க்கூட்டம் விரைவில் நடக்கும் என தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இதுகுறித்து தருமபுரி கோட்ட கண்காணிப்பாளர் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மண்டல அளவிலான அஞ்சல் மக்கள் குறைதீர் கூட்டம், இந்த மாதம் நடக்கிறது. அஞ்சல் துறை தலைவர் அலுவல கம், மேற்கு மண்டலம்,கோயம்புத்தூர் ஆர்.எஸ். புரம் தலைமை அஞ்சலக வளாகம், கோயம்பத்தூர் - 641002" அலுவலகத்தில் இக்கூட்டம் நடக்கிறது. நுகர்வோர் தங்கள் அஞ் சல் துறை சார்ந்த குறை ஏதேனும் இருப்பின், தபால் மூலம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள் ளுமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறது.

மக்கள் குறைத்தீர் கூட்டம் நடை பெறும் நாள் பின்னர் அறி விக்கப்படும். நுகர்வோர் தங்கள் மனு சார்ந்த அனைத்து விவரங்களை யும் தெளிவாக குறிப்பிட வேண்டும். கடிதத்தின் மேல் 'மக்கள் குறைதீர் கூட்டம்' என்று குறிப் பிடவும். தங்கள் மனுவை உதவி இயக்குநர் அவர் கள் (தபால் - தொழில்நுட்பம்), அஞ்சல்துறை தலைவர் அலுவலகம், மேற்கு மண்டலம், தமிழ் நாடு. கோயம்பத்தூர்- 641002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மனுக்கள் அலுவலகத்தை வந்தடைய வேண்டிய கடைசி நாள் வரும் 14ம் தேதி ஆகும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story