காய்கறிகளை பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு: வேட்பாளர் வாக்குறுதி

ஒட்டன்சத்திரத்தில் விவசாயிகளின் நலன் காக்க காய்கறிகளை பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு அமைக்க முயற்சி - திண்டுக்கல் அதிமுக கூட்டணி வேட்பாளர் முகம்மது முபாரக் வாக்குறுதி.

திண்டுக்கல் ஏப்ரல் 5: திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் முகமது முபாரக் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒட்டன்சத்திரம் நகரில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் . பிரச்சாரத்தின் போது வேட்பாளர் முகம்மது முபாரக் பேசுகையில்,

“மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன். பாராளுமன்ற உறுப்பினராக நான் வெற்றி பெற்றால் ஒட்டன்சத்திரத்தில் இயங்கும் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளும், விவசாயிகளும் பயன்பெறும் வகையில்,

காய்கறிகளை சேமித்து வைக்க அரசு சார்பில் குளிர்சாதன கிடங்கு அமைக்க முயற்சிப்பேன் என வாக்குறுதி அளித்தார்.

Tags

Next Story