மானாமதுரை அருகே தடுப்பணை கற்கள் சரிவு

மானாமதுரை அருகே தடுப்பணை கற்கள் சரிவு

தடுப்பணை கற்கள் சரிவு 

மானாமதுரை அருகே தடுப்பணை கற்கள் சரிவு - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
சிவகங்கை மாவட்டத்தில், நீர்வளத்துறை சார்பில் மானாமதுரை மற்றும் திருப்புவனம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டன. மானாமதுரை அருகே கட்டிக்குளம், மிளகனுார் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.30 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பணையில் கட்டிக்குளம், முத்தனேந்தல், மிளகனுார், துத்திக்குளம், கிருங்காக்கோட்டை, கீழமேல்குடி, கால்பிரிவு மற்றும் மானாமதுரை ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு, 6 ஆயிரத்து 316 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.இதே போல், மானாமதுரை அருகே கீழப்பசலை மற்றும் இதர 3 கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கட்டிக்குளம் தடுப்பணை பகுதியில் கரையோரங்களில் மண் சரியாமல் இருப்பதற்காக முண்டு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.இந்த கற்கள் தற்போது வைகை ஆற்றில் வந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் இதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story