இடிந்து விழும் நிலையில் நீர் தேக்க தொட்டி

இடிந்து விழும் நிலையில் நீர் தேக்க தொட்டி

 சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே நெப்புகை கிராமத்தில் 500கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யபபட்டு வருகிறது. தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது சிதிலமடைந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்களில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து உள்ளே உள்ள இரும்பு கம்பிகள் வெளியில் தெரிந்தபடி காட்சியளிக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் தருவாயில் உள்ளதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படாமல் குடிநீர் மாசற்று வருவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.மேலும் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகே சுய உதவி குழு வளாகம் ஊராட்சி மன்ற வளாகம் கிராம நிர்வாக அலுவலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story