கொல்லங்குடியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

கொல்லங்குடியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

கொல்லங்குடியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடி , காமராஜர் காலனி பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டியின் அடிப்பகுதிகள் முழுவதும் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த தண்ணீர் தொட்டியில் இருந்து நீர் நிரம்பி கீழே சிந்தும் நேரங்களில் சிறார்கள் குளித்து மகிழ்கின்றனர்.

இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விடும் சூழலில் இருப்பதால் அப்பகுதியில் வசிப்பவர்களும் அப்பகுதியில் செல்பவர்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் .

உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சரி செய்து தர வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story