இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி

இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி 

கரூர் மாவட்டம், மூலகாட்டனூர் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம், தாத்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ,மூல காட்டனுர் அருகே உள்ள போக்குவரத்து நகர், அமராவதி நகர் பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கு குடிநீர் வழங்க 20 ஆண்டுகளுக்கு முன்பு, காந்திகிராமம் அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.

கட்டளை காவிரியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி பின்னர் விநியோகம் செய்யப்பட்டது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அருகிலேயே மற்றொரு குடிநீர் தொட்டி கட்டப்பட்டதால், ஏற்கனவே உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டது.

இதனால், தற்போது சிதலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் குடிநீர் தொட்டி இடிந்து விழுந்து, பெரிய விபத்தை ஏற்படுவதற்கு முன்பு, குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என எதிர்பார்த்து உள்ளனர்.

Tags

Next Story