இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி - அகற்ற கோரிக்கை
இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி
பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் பிலிக்கல்பாளையம் ஊராட்சி சார்பில் 3-வது வார்டில் உள்ள சாணார்பாளையம் பகுதி யில் கடந்த 30 ஆண்டுகளுக்கு - முன்பு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இந்த குடிநீர் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருடங்களுக்கு 30 மேல் ஆனதால் குடிநீர் மேல்நிலை தொட்டியில் கான்கிரீட்டுகள் பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது.
அதே போல் தொட்டியின் தூண்களின் கான்கிரீட் விழுந்து கம்பிகள் தெரிகிறது. இதனால் தொட்டியில் அதிக குடிநீர் ஏற்றி பொது மக்களுக்கு விநியோகம் செய்ய முடியாத சூழ்நிலை வழுவிழந்து உள்ளது. இந்நிலையில் எந்த நேரமும் குடிநீர் தொட்டி உடைந்து விழும் நிலையில் உள்ளது. குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் அருகில் அங்கன்வாடி மையம் உள்ளது. எனவே தொட்டியினை இடித்து அகற்ற வேண்டும் என பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.