தேர்மண்டபத்தில் சரிந்து விழும் தகரம்

தேர்மண்டபத்தில் சரிந்து விழும் தகரம்

தேர்மண்டபத்தில் சரிந்து விழும் தகரம்

தேர்மண்டபத்தில் சரிந்து தேரடி சாலையில் ஆபத்தான நிலையில் விழுந்து வரும் தகர பலகையால் மக்கள் உயிருக்கு ஆபத்து.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தேர் கமலத்தேர் என அழைக்கபடுகிறது. 55 அடி உயரம் கொண்ட இந்த தேரானது. திருவாலங்காடு காவல் நிலையம் அருகே தேர்மண்டபம் அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. மூன்று பக்கம் சுவராலும் தேர்வெளி வரும் பக்கம் தகரத்தாலான பலகைகள் கொண்டு மண்டபம் மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த தகர பலகைகள் கீழே விழாமல் இருக்க, இரும்பு கம்பிகள் வாயிலாக பிணைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தகர பலகை பிணைக்கப்பட்டு இருந்த கம்பிகள் அறுந்து தகர பலகைகள் ஊசலாடுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்தும், வாகனத்தில் பயணிக்கும் இந்த தேரடி சாலையில் ஆபத்தான நிலையில் விழுந்து வரும் தகர பலகையால் மக்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதால் அச்சமடைந்துள்ளனர். எனவே சீரமைக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story