பெண் மேற்பார்வையாளர்கள் மீது சக ஊழியர்கள் புகார்

பெண் மேற்பார்வையாளர்கள் மீது சக ஊழியர்கள் புகார்
மனு அளிக்க வந்த சக ஊழியர்கள் 
விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் மேற்பார்வையாளராக பணிபுரிபவர்கள் பழிவாங்கும் வகையில் நடந்துகொள்வதாக தூய்மை மற்றும் காவல் பணியில் ஈடுபட்டுள்ள தற்காலிக ஊழியர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் தூய்மை பணியில் மற்றும் காவல் பணியில் கிரிஸ்டல் என்ற தனியார் நிறுவனத்தை சார்ந்த தற்காலிக ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மேற்பார்வையாளராக சரண்யா ஜெயசுதா மற்றும் இரண்டு பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பணிபுரியும் மற்ற பெண்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் தகாத வார்த்தையை திட்டுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர் புகாரை அடுத்து இருவரையும் தூத்துக்குடியில் உள்ள மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் மனதில் வைத்துக்கொண்டு இருவரும் மேலாளர் மீது காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்ததாகவும் தொடர்ந்து அந்த இரண்டு பெண்களும் மேற்பார்வையாளராக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டு மற்ற பெண் ஊழியர்களை பழிவாங்கும் நோக்குடன் நடந்து கொள்வதாக அவர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் மனு அளித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story