சென்னை புயல், மழைக்கு சிபிஎம் நிவாரணம் திரட்டி அனுப்பி வைப்பு 

சென்னை புயல், மழைக்கு சிபிஎம் நிவாரணம் திரட்டி அனுப்பி வைப்பு 
நிவாரணம் திரட்டும் பணி
சென்னை புயல், மழைக்கு சிபிஎம் நிவாரணம் திரட்டி அனுப்பி வைக்கப்பப்ட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் அண்மையில் கடும் புயல், மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழுவின் வேண்டுகோளின் படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டக் குழு சார்பில், மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், என்.சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என். குருசாமி, இ.வசந்தி, மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், மாநகரக் குழு உறுப்பினர்கள் சி.ராஜன், வீ.கரிகாலன், எம்.கோஸ் கனி, ஹெச்.அப்துல் நசீர் ஆகியோரிடம், தஞ்சை மாட்டு மேஸ்திரி சந்து பகுதி வணிகர்கள் சங்க தலைவர் பாபுஜி, செயலாளர் மோகன், துணைச் செயலாளர் கானாராம், ஜோராவர்சிங், கனகராஜ், அஷ்ரப், பாயல், ஆனந்த், நைல்மெல் சோனி, பீமாராம், சோட்டாராம் ஆகியோர், ரூபாய் 100 மதிப்புள்ள 90 பாய்கள், 150 ரூபாய் மதிப்புள்ள 90 பெட்ஷீட், 300 ரூபாய் மதிப்புள்ள 90 புடவைகள், 130 ரூபாய் மதிப்புள்ள 90 கைலிகள், 20 ரூபாய் மதிப்புள்ள கட்டைப்பை 90 என, மொத்த மதிப்பு ரூபாய் 63,000 மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கினர். இந்த நிவாரணப் பொருட்கள் பார்சல் சர்வீஸ் மூலம், சிபிஎம் மாநிலக் குழு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story