பண்டஅள்ளியில் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் பணி தீவிரம்

தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்டஅள்ளி பகுதியில் திமுக வேட்பாளர் ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் வாக்கு சேகரித்தார்.
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி,தருமபுரி சட்டமன்றத் தொகுதி நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம், பண்டஅள்ளி பகுதியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.டிஎன்வி.எஸ்.செந்தில்குமார் அவர்கள், திமுக நிர்வாகிகளுடன் திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து தேசிய கூட்டணி திமுக சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பி.என்.சி.மகேஷ்குமார், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ.செல்லதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story