நெசவு நெய்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

நெசவு நெய்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல்லில் தறி நெய்து ஓட்டு கேட்ட பாமக வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா திண்டுக்கல் மாநகராட்சி பாரதிபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் . அப்போது சௌராஷ்டிரா மொழியில் பேசி வாக்கு சேகரித்து அங்கு வாழக்கூடிய நெசவாளர் தொழிலாளர்களை வீட்டில் சந்தித்து அவர்களுடைய குறைகள் கேட்டறிந்தார். நெசவு நெய்தும், கண்டு சுத்தியும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த நாட்டின் பாரம்பரிய தொழிலே நெசவு தான். இந்த நெசவு தொழில் நசீவுக்கு காரணம் திமுக அரசுதான். அரசு வரிகளை குறைக்கவில்லை. அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளதால் வியாபாரிகள் விரக்தியில் உள்ளனர். இதனால் மக்கள் எனக்கு வாய்ப்பு அளியுங்கள், உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் பார்லிமெண்டில் எதிரொலிக்க செய்வேன். எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்களை சுற்றி சுற்றி வருவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story