தர்மபுரி நாடாளுமன்ற திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

தர்மபுரி நாடாளுமன்ற திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

தர்மபுரி நாடாளுமன்ற திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

தர்மபுரி நாடாளுமன்ற திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூதநத்தம், குண்டலமடுவு,மெனசி உள்ளிட்ட பகுதிகளில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர். செந்தில்குமார் மற்றும் முன்னாள் அமைச்சர் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர் தர்மபுரி திமுக வேட்பாளர் அ. மணி ஆதரித்து திமுக அரசின் சாதனைகளான மகளிர் உரிமைத் தொகை, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், இல்லம் தேடி மருத்துவம்,மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை அதிகரிப்பு, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை உள்ளிட்ட திட்டங்களை எடுத்துரைத்து தவறாமல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது, உடன் பொதுக்குழு உறுப்பினர் குட்டி, தருமபுரி (மே) மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பி.என்.சி.மகேஷ்குமார், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story