அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

மதுராந்தகம் நகர கழக சார்பில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் நகர கழக சார்பில் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை ஆதரித்து தலைமை கழகத்தின் நட்சத்திர பேச்சாளர் நிர்மலா பெரியசாமி மதுராந்தகம் நகருக்கு வருகை தந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தை மதுராந்தகம் நகரக் கழக செயலாளர் பூக்கடை சரவணன் ஏற்பட்டில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு சிறப்பித்தார் அப்போது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தலைமைக் கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி அப்போது அவர் பேசியது : தமிழகத்தில் நீட் தேர்வு மாநில அரசால் ரத்து செய்ய முடியாது. காங்கிரசும் திமுகவும் கொண்டு வந்தது தான் நீட் தேர்வு. போதை பொருள் விற்பனை செய்த ஜாபர் சாதிக்கு கொடுத்த பணத்தில் உதயநிதி ஸ்டாலின் மனைவி சினிமா படம் எடுக்கிறார். பாஜக புதுடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரி கைது செய்துள்ளது.தமிழ்நாட்டில் ஜனநாயக படுகொலை நிகழ்ந்துள்ளது இவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லைதமிழ்நாட்டில் ஜனநாயக படுகொலை நிகழ்ந்துள்ளது இவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை இவ்வாறு அவர் பேசினார் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பொதுமக்களிடையே எடுத்துக் கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் எம்பி சீனிவாசன், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முதுகரை கார்த்திகேயன், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story